பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய அலுவலகம் கட்டும் பணி துரிதம்

Added : ஜன 11, 2020
Advertisement

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு, 2 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.

பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு போதுமான கட்டட வசதி இல்லாததால், கடந்த ஆண்டு, ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் கூறு திட்டத்தில், 2 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பில், அனைத்து வசதிகளுடன், புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கியது.தற்போது, அலுவலக பயன்பாட்டிற்கு தனி அறை, 2 பி.டி.ஓ., க்களுக்கு தனி அறை, கணினி அறை, ஒன்றிய கவுன்சிலர்களுக்கு கூட்டம் நடத்த தனி அறை, தணிக்கை அறை என அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது.

அலுவலகம் எதிரே தரைத்தளம், ஒயரிங், பெயின்டிங் உள்ளிட்ட பணிகள் மட்டும் முடிக்க வேண்டி உள்ளது. அனைத்து பணிகளும் துரிதமாக நடந்து வருவதால், இன்னும் ஒரு மாதத்தில் கட்டடப்பணி முழுவதும், முடிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெறும் என, அதிகாரிகள் தெரிவித் தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X