பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Added : ஜன 11, 2020
Advertisement

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை ரயிலடியில் இருந்து சின்னக்கடை வரை, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரங்கிப்பேட்டை ரயிலடியில் இருந்து சின்னக்கடை வரை நெடுஞ்சாலைத்துறை சாலை ஓரங்களில், ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.சமீப காலமாக, வியாபாரிகள் அவர்களது கடைகளுக்கு முன்பு கொட்டகை, அமைத்துள்ளதால், சாலை ஆக்கிரமிப்பு அதிக அளவில் உள்ளது.

குறிப்பாக, கீரைக்கார தெரு, சஞ்சீவி ராயர் கோவில் தெரு, சின்னக்கடை தெரு உள்ளிட்ட இடங்களில், சாலை ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், எதிர் வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாத நிலை ஏற்படுகிறது. இதில், யார், பின்னால் செல்வது என வாகன ஓட்டிகளுக்குள் ஏற்படும் 'ஈகோ' பிரச்சனையால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது.

இது போன்ற நேரங்களில், பள்ளி மாணவர்கள், ஊழியர்கள் நெரிசலில் சிக்கிக்கொள்கின்றனர். சமூக ஆர்வலர்கள், டிரைவர்களிடம் சமரசம் செய்து வைக்க வேண்டி உள்ளது.எனவே, பரங்கிப்பேட்டை ரயிலடியில் இருந்து சின்னக்கடை வரை, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X