கோப்புகள் தேக்கம்: கவர்னர் கிரண்பேடி புகார் | Dinamalar

கோப்புகள் தேக்கம்: கவர்னர் கிரண்பேடி புகார்

Updated : ஜன 11, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (15)
Share
புதுச்சேரி : கோப்புகள் எங்கே, யாரிடம் உள்ளது என்பதை கண்டறியும் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்' என, புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.சமூக வலைதளத்தில், அவரது பதிவு:ஊழல் இல்லாத எதிர்கால புதுச்சேரியை உருவாக்க வேண்டும். அரசின் சேவையை பெறுவதற்கு, பொதுமக்கள் அலைக்கழிக்கப்படக் கூடாது. அரசில், கோப்புகளின் நகர்வில் தாமதம் கூடாது. கோப்புகள் எந்த
கோப்புகள் தேக்கம்: கவர்னர் கிரண்பேடி புகார்

புதுச்சேரி : கோப்புகள் எங்கே, யாரிடம் உள்ளது என்பதை கண்டறியும் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்' என, புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.சமூக வலைதளத்தில், அவரது பதிவு:


latest tamil news


ஊழல் இல்லாத எதிர்கால புதுச்சேரியை உருவாக்க வேண்டும். அரசின் சேவையை பெறுவதற்கு, பொதுமக்கள் அலைக்கழிக்கப்படக் கூடாது. அரசில், கோப்புகளின் நகர்வில் தாமதம் கூடாது. கோப்புகள் எந்த இடத்தில், யாரிடம், எந்த நிலையில் உள்ளது என்பதை அறிவதற்கான நடைமுறை தேவையாக உள்ளது.குறிப்பிட்ட சில அமைச்சர்கள், ஒரு ஆண்டுக்கும் மேலாக வைத்திருந்து, ராஜ்நிவாசுக்கு அனுப்பும் கோப்புகளை பார்க்க முடிகிறது. அமைச்சர்களிடம் தங்கும் கோப்புகளை, கேட்டு பெறுவதற்கு, அரசு செயலர்கள் தயங்குகின்றனர்.புதிய தொழில்நுட்பங்கள் மூலமாக, ஒவ்வொரு கோப்பு நகர்வையும் வெளிப்படையானதாக மாற்றுவதற்கு, தேசிய தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசின் நடவடிக்கைகளை வெளிப்படையாகவும், இன்னும் வேகமாகவும், பொறுப்பாகவும் மாற்றும் மென்பொருட்களை சிறந்த முறையில் பயன்படுத்தாமல், ஒரு நகரம் ஸ்மார்ட் நகரமாகாது.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X