பொது செய்தி

தமிழ்நாடு

இது 'ஜாலி' பொங்கல்!

Added : ஜன 11, 2020
Advertisement
 இது 'ஜாலி' பொங்கல்!

பொங்கல் பண்டிகை நெருங்கிக்கொண்டே இருக்கிறது. கிராமங்களில் மூன்று நாட்களுக்கு கோலாகலமாக நடக்கும். ஆனால், தொழில்நுட்பத்தின் பின்னால் ஓடும் இக்காலத்து நகர வாசிகள், மொபைல் போன் மயக்கத்திலுள்ள இளசுகள் மத்தியில் பாரம்பரிய பொங்கல் விழாவின் மகத்துவம் மெல்ல மெல்ல மலிந்து கொண்டே இருக்கிறது என்பது மூத்தோர் வாதம்.அதேசமயம், 'எங்களுக்கும் பாரம்பரியம், திருவிழாக்களின் அருமை தெரியும்...!' என, சாட்டையில் அடிக்காத குறையாக, அனைவரையும் திரும்பிப்பார்க்கும் அளவுக்கு பள்ளி, கல்லுாரிகளிலும் பொங்கல்விழா களைகட்டிக்கொண்டிருக்கிறது. சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரியிலும் பொங்கல்விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.பட்டு சேலையை வரிந்து கட்டிக்கொண்டு மாணவிகளும், வேட்டியை மடித்துக்கட்டியபடி மாணவர்களும் பாரம்பரிய உடையில் வந்திருந்தனர். வீட்டில் அம்மா அடித்துச் சொன்னாலும் அடுப்பறை பக்கம் போகாத இளம்பெண்கள், குழுவாக பூக்கோலமிட்டு, பானையில் பொங்கல் வைத்த காட்சி அனைவரையும் ஈர்த்தது.'நீங்களா... நாங்களானு ஒரு கை பார்த்திருவோம்' என்றபடி, சேலையை செருகிக்கொண்டு, ஆண்களுக்கு ஈடுகொடுத்து கேலியும் கிண்டலுமாக பொங்கல்விழாவை சிறப்பித்தனர் பெண்கள். அனைத்து துறை மாணவ, மாணவியர் ஒன்றாக பொங்கல் சாப்பிட்டு மகிழ்ந்தனர். கல்லுாரி முதல்வர் தீபா இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.கும்மியடி பெண்ணே கும்மியடி!15, வேலம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் பொங்கல் பண்டிகை நேற்று கோலாகலமாக நடந்தது. பாரம்பரியத்தை உணர்த்தும் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதன் அவசியம் குறித்து மாணவ, மாணவியருக்கு ஆசிரியர்கள் எடுத்துரைத்தனர். ஆசிரியர்கள் இணைந்து பொங்கல் வைத்து மகிழ்ச்சியை பகிர்ந்தனர்.பள்ளியில் படிக்கும், 1400 பேருக்கு பொங்கல், சாம்பார் சாதம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள், மாணவர்கள் நிகழ்த்திய கும்மியாட்டம் அனைவரையும் கவர்ந்தது. பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பரணி நடராஜ், தலைமை ஆசிரியர் ராதாமணி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X