துாய்மை நகருக்கு ஊழியர்கள் பயணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துாய்மை நகருக்கு ஊழியர்கள் பயணம்

Added : ஜன 11, 2020
 துாய்மை நகருக்கு ஊழியர்கள் பயணம்

கிள்ளை:துாய்மையான நகரமாக தேர்வு செய்யப்பட்ட, மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சிக்கு, கிள்ளை பேரூராட்சி ஊழியர்கள் ஒரு நாள் பயிற்சிக்காக, சென்றுள்ளனர்.

மத்திய அரசு துாய்மை இந்தியா திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. நகர துாய்மை குறித்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, 3 மாதத்திற்கு ஒரு முறை சர்வே நடத்தி வெளியிட்டு வருகிறது.கடந்த மாதம் நடந்த கணக்கெடுப்பில், தஞ்சாவூர் மாவட்டம் மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சி இடம் பெற்றுள்ளது.

இப் பேரூராட்சியில், நடைபெற்று வரும் மக்கும், மக்காத குப்பை தரம் பிரித்தல், உரம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்துக்கொள்ளும் வகையில், கிள்ளை பேரூராட்சி ஊழியர்கள், 24 பேர் ஒரு நாள் பயிற்சிக்காக மேலத்திருந்துருத்தி பேரூராட்சிக்கு சென்றுள்ளனர்.அவர்களை, செயல் அலுவலர் தங்கவேல் வழி அனுப்பி வைத்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X