பொது செய்தி

தமிழ்நாடு

கடலுார் சேம்பர் ஆப் காமர்ஸ் நிர்வாகிகள் தேர்வு

Added : ஜன 11, 2020
Advertisement

கடலுார்:கடலுார் வணிகர் சங்க பேரமைப்பின் முதல் ஆலோசனை கூட்டம் சேம்பர் ஆப் காமர்ஸ் அலுவலகத்தில் நடந்தது.

கடலுார் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் சண்முகம், நகர தலைவர் துரைராஜ், செயலர் சீனுவாசன், பொருளாளர் தேவி முருகன், இணை செயலர் வெங்கடேசன், செல்லபாண்டியன், வீனஸ் சேகர், பாலாஜி, ராஜாத்தி அயூப், சன்பிரைட் பிரகாஷ், முதுநகர் சதிஷ், சவுபாராசன், ஆனந்த் கலந்து கொண்டனர்.

துணை தலைவராக பட்டேல், செயலாளராக வள்ளி விலாஸ் சீனுவாசன், இணை செயலாளர்களாக பெட்ரோல் பங்க் வெங்கடேசன், சுகந்தி மளிகை செல்ல பாண்டியன், கடலுார் நகர ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணா டைல்ஸ் தமிழ்முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

கூட்டத்தில், முதுநகர், சிப்காட், இம்பீரில் ரோடு, வண்டிப்பாளையம், திருவந்திபுரம், பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், திருப்பாதிரிப்புலியூர், கம்பியம்பேட்டை, கோண்டூர், சாவடி, செம்மண்டலம், ஆல்பேட்டை, மஞ்சக்குப்பம், ரெட்டிச்சாவடி, தாழங்குடா, உப்பலவாடி, பாரதிரோடு, புதுப்பாளையம், வண்ணாரப்பாளையம், செல்லங்குப்பம், பச்சையாங்குப்பம் ஆகிய பகுதிகளில் பகுதி செயலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சேம்பர் ஆப் காமர்ஸ்சில் உறுப்பினரானவர்கள், தகுதி, செயலாக்க அடிப்படையில் பொங்கலுக்கு முன்பு தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே அனைவரும் உறுப்பினர்களாக வேண்டும்.கடலுார் சேம்பர் ஆப் காமர்ஸ் அரசியல், மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு இயங்கும்.

கடலுார் பழைய கலெக்டர் அலுவலகத்தில் சேம்பர் ஆப் காமர்ஸ் அலுவலகத்திற்கு இடம் வாடகைக்கு கேட்டு மனு கொடுப்பது. உறுப்பினர்களின், வங்கி கடன், தனி நபர் கடன், வரவு, செலவு பிரச்னைகளுக்கு, சேம்பர் ஆப் காமர்ஸ் துணை நிற்கும். பொருட்காட்சி, இசை நிகழ்ச்சி, பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டப்படும் என்பது உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X