தமிழ்நாடு

குட்கா விற்பனையை முற்றிலும் ஒழிக்க 'ஸ்பாட் பைன்'

Updated : ஜன 11, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (2)
Advertisement
குட்கா விற்பனையை முற்றிலும் ஒழிக்க 'ஸ்பாட் பைன்'

மதுரை, மதுரை நகரில் குட்கா விற்பனையை தடுக்க முதல் முறையாக 'ஸ்பாட் பைன்' திட்டத்தை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நிறைவேற்றவுள்ளது.
மாநிலத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இத்தடையை மீறி குட்கா விற்பனை மதுரை உள்ளிட்ட இடங்களில் தாராளமாக நடக்கிறது. இதை தடுப்பது குதிரை கொம்பாக உள்ளது. இவ்விற்பனையை உணவு பாதுகாப்பு துறையினர் கண்டுபிடித்தால் கூட, விற்போர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருந்தது. தற்போது முதல் முறையாக உடனடியாக அபராதம் விதிக்க உணவு பாதுகாப்பு துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுஉள்ளது. இந்த அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தி மதுரையில் குட்காவை ஒழிக்க மாவட்ட உணவு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது. நகரில் முதற்கட்டமாக இருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு அலுவலர் சோமசுந்தரம் கூறியதாவது: குட்காவை ஒழிக்க உடனடியாக அபராதம் விதிக்கும் அதிகாரம் கிடைத்துள்ளது. இது நல்ல பலன் அளிக்கும். குட்கா விற்றால் முதல் முறை ரூ.5 ஆயிரம், 2வது முறை 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 3வது முறையும் விற்றால் 25 ஆயிரம் அபராதம் மற்றும் கடை உரிமம் ரத்து செய்யப்படும். அபராதத்தை கட்டத் தவறினாலும் உரிமம் ரத்தாகும். தொடர்ச்சியாக ஆய்வு நடத்தி அபராதம் விதிக்கவுள்ளோம், என்றார்.


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Varun Ramesh - Chennai,இந்தியா
11-ஜன-202021:31:54 IST Report Abuse
Varun Ramesh புகையிலை உடல் நலத்திற்கு தீங்கானது.எனவே தடை செய்யப்பட்ட வேண்டியது. அரசின் முயற்சிகளில் உள்ள நியாயம் புரிகிறது. இதே லாஜிக் அரசே விற்பனை செய்யும் மதுவுக்கு பொருந்தாதோ?
Rate this:
Share this comment
Cancel
ஜெய் ஸ்ரீ ராம் குட்கா பயன்படுத்த எந்த பைனும் இல்லையா ? தயாரிக்கும் கம்பெனியை மூடவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X