திருமங்கலம், சென்னை பிராட்வே ஐயப்ப பக்தர்கள் பாஸ்கர் என்ற குருசாமி தலைமையில் சபரிமலைக்கு சென்று விட்டு ஸ்ரீவில்லிபுத்துார் வழியாக மதுரைக்கு திரும்பினர்.கப்பலுார் டோல்கேட்டில் பாஸ்டிராக் லைனில் தவறுதலாக சென்ற அவர்களிடம் டோல்கேட் ஊழியர்கள் 2 மடங்கு கட்டணம் கேட்டனர். ஐயப்ப பக்தர்கள் தரமறுத்தனர். வேனில் இருந்து இறங்கிய அவர்களை டோல்கேட்டில் இருந்த 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சூழ்ந்து கொண்டு கட்டை, இரும்பு கம்பிகளால் தாக்கினர்.ஐயப்ப பக்தர்கள் புகாரின்படி நகர் போலீசார் விசாரித்து டோல்கேட் ஊழியர்கள் பங்கஜ்குமார், விக்னேஷ், ரோஹித், தேஜ்வீர்சிங் ஆகியோரை 4 பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE