தமிழ்நாடு

மேற்கு ஒன்றியத்தலைவர் பதவி தி.மு.க., கைப்பற்றுகிறது

Added : ஜன 11, 2020
Share
Advertisement

மதுரை, அ.தி.மு.க.,வில் நிலவும் கோஷ்டி பூசல் எதிரொலியாக கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் மதுரை மேற்கு ஒன்றிய தலைவர் பதவியை தி.மு.க., கைப்பற்றுகிறது.இந்த ஒன்றியம் மதுரை கிழக்கு, மேற்கு மற்றும் சோழவந்தான் சட்டசபை தொகுதிகளில் அமைந்துள்ளது. ஒன்றியத்தில் அ.தி.மு.க., 5, தி.மு.க., 5, சுயே., 1, விடுதலை சிறுத்தைகள் 1, காங்., 1 வார்டுகளை கைப்பற்றின. இதில் 3வது வார்டில் சுயே.,யாக வெற்றி பெற்ற செல்வி ஆரோக்கியமேரி தி.மு.க.,வை சேர்ந்தவர். கட்சியில் சீட் வழங்கப்படாததால் சுயே., ஆக போட்டியிட்டு வென்றார்.இந்த ஒன்றியத்தலைவர் பதவியை கைப்பற்ற அ.தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் முயற்சித்து வந்தார். அமைச்சர் உதயகுமார் ஆதரவாளரான அவருக்கு எம்.எல்.ஏ., மாணிக்கம் உள்ளிட்ட கட்சியினர் ஆதரவாக இருந்தனர். ஆனால் ஐந்து வார்டுகளை மட்டுமே அ.தி.மு.க., கைப்பற்ற முடிந்ததால் தலைவர் பதவி கானல் நீரானது. ஓட்டு எண்ணிக்கை முடிந்த கையுடன் சுயே., உள்ளிட்ட சில கவுன்சிலர்களுக்கு துணைத்தலைவர் பதவி ஆசை காட்டி தலைவர் பதவியை கைப்பற்ற அ.தி.மு.க., முயற்சித்தது. ஆனால் அமைச்சர் உதயகுமார், எம்.எல்.ஏ., மாணிக்கம் ஆதரவாளரான முருகேசனை தலைவராக்க அமைச்சர் செல்லுார் ராஜூ தலைமையிலான அ.தி.மு.க.,வினர் தீவிரம் காட்டாததால் முயற்சி கைவிடப்பட்டது. அ.தி.மு.க.,வின் கோஷ்டிபூசல் எதிரொலியாகவும், காங்., விடுதலை சிறுத்தைகள் ஆதரவு இருப்பதாலும் தலைவர் பதவியை தி.மு.க., கைப்பற்றுகிறது. தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி ஆதரவாளரான வீரராகவன் தலைவராக வாய்ப்புள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X