பொது செய்தி

தமிழ்நாடு

பதற்றமான ஊராட்சிகளில் வீடியோ கேமரா கண்காணிப்பு

Added : ஜன 11, 2020
Advertisement

மதுரை, ''மதுரை மாவட்டத்தில் இன்று (ஜன., 11) நடக்கும் மறைமுகத்தேர்தலில் பதட்டமான 244 ஊராட்சிகளில் வீடியோகேமரா மூலம் கண்காணிப்பு நடக்கும்,'' என, கலெக்டர் வினய் தெரிவித்தார்.மாவட்ட ஊராட்சி, ஒன்றிய தலைவர், ஊராட்சி தலைவர் தேர்தல் இன்று காலை 11:00 மணிக்கும், துணை தலைவர் தேர்தல் பகல் 3:30 மணிக்கும் நடக்கிறது மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் கலெக்டர், ஒன்றிய தலைவர், துணை தலைவர் தேர்தல் அந்தந்த தேர்தல் அலுவலர்கள், ஊராட்சி தவைலர், துணை தலைவர் தேர்தல் அந்தந்த தேர்தல் அலுவலர்களால் நடக்கிறது. தேர்தல் முழுவதையும் வீடியோ பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.கலெக்டர் கூறியதாவது: பதட்டமான 244 ஊராட்சிகளில் வீடியோ கேமரா உதவியுடன் தேர்தல் நடக்கும். ஒன்றியங்களில் தேர்தல் நடைமுறைகளை கண்காணிக்க துணை கலெக்டர் அந்தஸ்திலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் எஸ்.பி., தலைமையில் 10 டி.எஸ்.பி.,கள், 36 இன்ஸ்பெக்டர்கள், 1100 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X