பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு உதவித்தொகை

Added : ஜன 11, 2020
Advertisement

மதுரை, மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு மாத உதவித்தொகை வழங்குகிறது.இதற்கான விண்ணப்பங்கள் மையத்தில் இலவசமாக வழங்கப்படுகின்றன. பொது பிரிவு பதிவுதாரர்கள் கல்வித்தகுதி பதிவு செய்து குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் பூர்த்தி செய்திருக்க வேண்டும். பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள், தேர்ச்சி பெற்றவர்கள், மேல்நிலைக்கல்வி மற்றும் பட்டதாரி கல்வித்தகுதியுள்ள பதிவுதாரர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. குடும்ப ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் 45 வயது இதர வகுப்பினர் 40 வயதினராக இருக்கும். தமிழகத்தில் பள்ளி, கல்லுாரி கல்வியை முடித்தவராக இருத்தல் வேண்டும். சம்பளம் பெறும் எந்த பணியிலும் இருக்க கூடாது. அரசு மற்றும் பிற துறைகள் மூலம் நிதியுதவி பெற கூடாது. விண்ணப்பங்களை பிப்., 28 வரை பெறலாம். பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என துணை இயக்குனர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X