மணலுாரில் அம்மா திட்ட முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மணலுாரில் அம்மா திட்ட முகாம்

Added : ஜன 11, 2020
 மணலுாரில் அம்மா திட்ட முகாம்

மூங்கில்துறைப்பட்டு:மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மணலுாரில் அம்மா திட்ட முகாம் நடந்தது.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த மணலுாரில் நடந்த அம்மா திட்ட முகாமிற்கு சங்கராபுரம் மண்டல துணை வட்டாச்சியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் அரசு முன்னிலை வகித்தார். மணலுார் வி.ஏ.ஓ., முருகன் வரவேற்றார்.

இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து 90 மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் 25 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. வி.ஏ.ஓ., க்கள் சரவணன், கோவிந்தராஜ், பிரபாகரன், பாலசுப்பிரமணியன், விஜயபிரபாகரன், கவுசிக், கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.வி.ஏ.ஓ., தஸ்தகீர் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X