பொது செய்தி

தமிழ்நாடு

பங்காரம் லஷ்மி கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா

Added : ஜன 11, 2020
Advertisement

கள்ளக்குறிச்சி:பங்காரம் லஷ்மி கல்வி நிறுவனங்கள் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லஷ்மி கல்வி நிறுவனங்கள் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா நடந்தது.

லஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கி பரிசுகள் வழங்கினார்.செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் வீரமணி வரவேற்றார்.

லஷ்மி கல்வி நிறுவனங்களின் கல்வி ஆலோசகர் நாராயணசாமி, கல்வியியல் கல்லுாரி முதல்வர் பாஸ்கரன் வாழ்த்துரை வழங்கினர்.பொங்கல் விழாவினையொட்டி கல்லுாரி மாணவ மாணவிகளுக்கு கபடி, உரியடித்தல், கோலம், கயிறு இழுத்தல் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

கல்லுாரி நிர்வாகம் சார்பில் சமுத்துவ பொங்கல் வைத்து வழிபட்டனர்.விழாவில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள், கல்வி நிறுவனங்களின் ஓட்டுனர்கள், ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். துணை முதல்வர் சேதுமுருகன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X