சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீபாவளி சீட்டு மோசடி நபர் மீது மேலும் ஒரு வழக்கு

Added : ஜன 11, 2020
Advertisement

திருக்கோவிலூர்:திருக்கோவிலூர், கடைவீதியில், ராகவேந்திரா ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்த முரளிகிருஷ்ணன், தீபாவளி சீட்டு கட்டியவர்களுக்கு கூறியதுபோல் நகை உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் கொடுக்காமல் இருந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் முரளிகிருஷ்ணனை கடந்த மாதம் 20ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் கனகனந்தல் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி, 60; தனது உறவினர் உள்ளிட்டோர் பெயரில் மாதாந்திர சீட்டு 5 லட்சத்து 70 ஆயிரத்து 700 ரூபாய் கட்டியதாகவும், பணத்தை கொடுக்காமல் தலைமறைவாகி விட்டதாக கொடுத்த புகாரின் பேரில், திருக்கோவிலூர் போலீசார், முரளிகிருஷ்ணன் மீது மேலும் ஒரு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X