பொது செய்தி

இந்தியா

கொச்சி மாராடு குடியிருப்பு: இன்று (ஜன.11) வெடி வைத்து தகர்க்க ஏற்பாடு

Updated : ஜன 11, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (5)
Advertisement
கொச்சி மாராடு குடியிருப்பு: இன்று (ஜன.11) வெடி வைத்து தகர்க்க ஏற்பாடு

கொச்சி : கொச்சியில் விதிமீறி கட்டப்பட்டுள்ள மாராடு குடியிருப்பு இன்று காலை வெடித்து தகர்க்கப்படுகிறது. கேரளாவில், கொச்சி, மாராடு அருகே 4 அபார்ட்மென்டுகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை மீறி, கட்டப்பட்டதாக, புகார் எழுந்தது. இது குறித்த வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றம், விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட, 350 வீடுகளை இடித்து தரைமட்டமாக்க, கடந்தாண்டு மே மாதம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள், வீடுகளை காலி செய்யும்படி, அவற்றின் உரிமையாளர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பினர். இடிக்கும் பணியை நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்பட்ட போதிலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த வேண்டிய கட்டாயம், மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வேறுவழியின்றி குடியிருப்புவாசிகள் அனைவரும் காலி செய்துவிட்டனர். வீடுகளை இடிப்பதற்கான மேல் நடவடிக்கைகள் குறித்து பி.இ. எஸ். ஓ. எனப்படும் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த குழுவினர் கட்டடத்தை ஆய்வு செய்தனர்.
முன்னதாக எர்ணாகுளம் மாவட்ட மாஜிஸ்திரேட், கலெக்டர் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. மாவட்ட மாஜிஸ்திரேட் தடையில்லா சான்று அளித்துள்ளார்.
இதையடுத்து இன்று (ஜன. 11) காலை 11 மணிக்கு வெடி வைத்து தகர்க்கும் பணி துவங்குகிறது. ஜன.12-ம் தேதி பணிகள் முழுமையாக நிறைவடயும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கினறன.முன்னதாக குடியிருப்பை சுற்றியுள்ள மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். கட்டடத்திலிருந்து 200 மீ தொலைவிற்கு போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srinath - Manama,பஹ்ரைன்
11-ஜன-202015:53:30 IST Report Abuse
srinath கவர்மெண்ட் அந்த அதிகாரிகளை பணி நீக்கம் SEITHU மற்றும் அவர்களது பரம்பரை யாவரும் கர்வேன்ட்மென்ட் ஜாப்பிற்கு THAGUTHI இல்லை என்று அறிவிக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
11-ஜன-202009:34:37 IST Report Abuse
Lion Drsekar இந்த வீட்டைக் கட்டுவதற்கு வாங்கியவர்கள் எப்படியெல்லாம் சிரமப்பப்பட்டு பணம் செலுத்தியிருப்பார்கள் கட்டியவர்கள் எத்தினை துறைகளுக்கு எவ்வளவு கோடி லஞ்சம் கொடுத்திருப்பார்கள், இதில் பயன் பெறுபவர்கள் லஞ்சம் பெற்றவர்கள் . அடுத்து எந்த தொழில் செய்தாலும் அவர்களிடமும் இவர்கள் தங்களது தொழிலை செவ்வனே செய்யப்போகிறார்கள், இதுவரையில் லஞ்சம் வாங்கி இது போன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று அனைவரும் கேட்க்கும் கேள்வி, ஒரே பதில் ஜனநாயகம், ஜனநாயகம் என்பது இரு சாரர்களுக்கு மட்டுமே, மக்கள் அந்த இரு சாரார்கள் வாழ உழைக்கப்பிறந்தவர்கள். வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
natarajan s - chennai,இந்தியா
11-ஜன-202008:23:04 IST Report Abuse
natarajan s சென்னையிலும் இதுமாதிரி நடவடிக்கை எடுத்தால் T நகரில் பல கட்டடங்கள் நிலைமை இதுதான் .
Rate this:
Share this comment
R. Vidya Sagar - Chennai,இந்தியா
11-ஜன-202010:26:13 IST Report Abuse
R. Vidya Sagarநம்ம சென்னையை சேர்ந்த Jain Housing உம் இதில் சிக்கி இருக்கிறார்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X