பொது செய்தி

தமிழ்நாடு

புகையிலை பொருட்கள் விற்பனை தடுக்க 60 பேர் கொண்ட தனிப்படை அமைப்பு :எஸ்.பி., ஜெயக்குமார் தகவல்

Added : ஜன 11, 2020
Share
Advertisement

விழுப்புரம்:மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என எஸ்.பி., ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:மாவட்டத்தில் சட்ட விரோதமாக பான் மசாலா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண்காணிக்க 10 சப் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 60 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகள் மீது தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 7ம் தேதி முதல் கல்விக் கூடங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகே உள்ள கடைகளில் 18 வயதிற்கும் குறைவானவர்களுக்கு பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த சங்கீதமங்கலத்தைச் சேர்ந்த சத்தியபிரகாஷ், கிடங்கல்-1 குமார், செஞ்சி, கிருஷ்ணாபுரம் பிரான், பீரங்கிமேட்டு ராஜேந்திரன் உட்பட 18 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், குற்றவாளிகளிடமிருந்து 18 ஆயிரத்து 377 தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும், உடந்தையாக இருப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த குற்றவாளிகளை ஓராண்டு தடுப்புக் காவலில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X