சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாய் கடியால் பாதிக்கப்பட்ட மரக்காணம் போலீசார்

Added : ஜன 11, 2020
Advertisement

மரக்காணம்:மரக்காணத்தில் நடந்து சென்று கொண்டிருந்த இரண்டு ஏட்டுக்களை நாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மரக்காணம் காவல் நிலையத்தில் தலைமை காவலர்களாக பணியாற்றுபவர்கள் முனுசாமி, மலையாளத்தான். இவர்கள் இருவரும் காவல் நிலையம் பின்புறம் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.தலைமை காவலர்கள் இருவரும், அங்குள்ள கடைத் தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு சுற்றித்திரிந்த நாய், அடுத்தடுத்து இருவரையும் கடித்துவிட்டது.

நாய் கடிக்குள்ளான இருவரும், அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். கடந்த சில நாட்களாக மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 50க்கும் மேற்பட்டோரை நாய்கடித்துள்ளதால், பேரூராட்சி நிர்வாகம், தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X