பொது செய்தி

தமிழ்நாடு

பா.ம.க., செயற்குழு கூட்டம்

Added : ஜன 11, 2020
Advertisement
 பா.ம.க., செயற்குழு கூட்டம்

அவலுார்பேட்டை:மேல்மலையனுாரில் பா.ம.க., செயற்குழு கூட்டம் நடந்தது.

மேல்மலையனுாரில் மத்திய ஒன்றிய பா.ம.க., சார்பில் செயற்குழு கூட்டம் நடந்தது.ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஒன்றிய மீனவரணி தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் ராஜசேகர் வரவேற்றார்.மாநில துணை அமைப்பு செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் பெருமாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கட்சி தலைமை கூறியபடி, திட்டங்களை நிறைவேற்ற கிராமங்களில் குழு அமைத்தல், புதிதாக உறுப்பினர்களை சேர்த்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் தாண்டவராயன், முன்னாள் ஒன்றிய சேர்மன் அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.நகர செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X