தமிழ்நாடு

சீரமைக்கப்படுமா? ஆற்றுத் திருவிழாவிற்கு முன் தென்பெண்ணை ஆறு...முட்புதர்களால் பொது மக்களுக்கு இடையூறு

Added : ஜன 11, 2020
Advertisement
 சீரமைக்கப்படுமா? ஆற்றுத் திருவிழாவிற்கு முன் தென்பெண்ணை ஆறு...முட்புதர்களால் பொது மக்களுக்கு இடையூறு

விழுப்புரம்:விழுப்புரம் அருகே பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்றில், காடுபோன்று வளர்ந்துள்ள முட்புதர்களால் ஆற்றுத்திருவிழாவின் போது பொது மக்களுக்கு இடையூறுஏற்படும் நிலை ஏற்பட்டுளளது.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான, பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப் படுகின்றது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, ஆற்றுத்திருவிழாவும், கோலாகலமாக கொண்டாடப்படுவதும் வழக்கம்.அதன்படி, இந்த ஆண்டிற்கான ஆற்றுத் திருவிழா வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த திருவிழா, விழுப்புரம் மாவட்டத்தில் செல்லும் தென்பெண்ணை ஆறு, பம்பை ஆறு உள்ளிட்ட ஆறுகளில் பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து சுவாமிகள் அலங்கரித்து, ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்று வருகின்றன.அதன்படி, இத்திருவிழாவையொட்டி விழுப்புரம் அடுத்த பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி கோலாகலமாக ஆண்டுதோறும் நடந்துவருகின்றது.

இங்கு பரிக்கல் லட்சுமிநரசிம்மர், ஆலங்குப்பம் பாண்டுரங்கன், அங்காளம்மன், பேரங்கியூர் கோதண்டராமர், ஆ.நத்தம் வைகுண்டவாசப் பெருமாள், மேலமங்கலம் ஆதிகேசவப்பெருமாள் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து சுவாமிகள் ஆற்றிற்கு கொண்டு வந்து, வரிசையாக சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடத்தப்பட்டு வருகின்றது. பின், அலங்காரம் செய்து, பக்தர்களுக்கு சுவாமிகள் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கும்.

இதற்காக, பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்றிற்கு, விழுப்புரம் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள், ஆயிரக்கணக்கில் காலை முதல் குடும்பத்துடன் பங்கேற்பர். மேலும், இங்கு திருவிழா கடைகள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

இந்நிலையில், பேரங்கியூர் தென்பெண்ணை ஆறு முழுவதும் தற்போது முட்புதர்கள் மண்டி காடு போன்று காட்சியளிக்கின்றது. இதனால், வரும் 19ம் தேதி நடைபெறும் ஆற்றுத் திருவிழா வில் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.எனவே, ஆற்றுத் திருவிழாவை யொட்டி பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்றில் உள்ள முட்புதர்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்ற கலெக்டர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X