சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகராட்சிக்கு குடிநீர் கட்டணம் பாக்கி இணைப்பை துண்டித்து நடவடிக்கை

Added : ஜன 11, 2020
Advertisement
 நகராட்சிக்கு குடிநீர் கட்டணம் பாக்கி இணைப்பை துண்டித்து நடவடிக்கை

திண்டிவனம்:திண்டிவனம் நகராட்சிக்கு குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் இணைப்புகள் துண்டிக்கப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திண்டிவனம் நகராட்சி ஆணையாளர் ஸ்ரீபிரகாஷ் உத்தரவின் பேரில், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் கட்டணம் மற்றும் கடை வாடகை வசூல் செய்வதற்கு தனித்தனியாக 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.இதே போல் குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் நடவடிக்கை கடந்த ஒரு வாரமாக, பொறியாளர் பவுல்செல்வம் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் 5,6,7 மற்றும் 22,30 ஆகிய வார்டுகளில் நகராட்சிக்கு குடிநீர் கட்டணம் செலுத்தாமல் இருந்ததற்காக, 15 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்று நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X