பொது செய்தி

தமிழ்நாடு

சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

Added : ஜன 11, 2020
Advertisement
 சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது.

கள்ளக்குறிச்சியில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்திற்கு சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார். கால்நடைதுறை உதவி இயக்குனர் பெரியசாமி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் வினோதினி, சுதர்சன், தோட்டக்கலை அலுவலர் பாலவித்யா உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வடக்கனந்தலில் வீடுகளில் இருந்து வரும் கழிவு நீர் ஓடையில் கலப்பது, சங்கராபுரம் பகுதியில் அதிகளவு விளையும் சின்னவெங்காயம் உட்பட காய்கறிகளை விற்பனை செய்ய காய்கறி மார்க்கெட் அமைத்தல், ேஷசசமுத்திரம் கிராமத்தில் அரசியல் பிரமுகர்கள் குறுக்கீடு இல்லாமல் ஆயக்கட்டு பாசன விவசாயிகளிடம் முறையான ஓட்டெடுப்பு நடத்தி ஏரியை துார் வார அனுமதி அளித்தல்,

பாலப்பட்டு ஏரியில் 1.25 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து கொசப்பாடி ஏரிக்கு தண்ணீர் வரும் வகையில் வரத்து வாய்க்கால் அமைத்தல் உள்ளிட்டவைகள் விவசாயிகள் சார்பில் கோரிக்கையாக வைக்கப்பட்டது.கோரிக்கைகளை முறையாக விசாரித்து நிறைவேற்றுவதற்காக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு சப்-கலெக்டர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X