பொது செய்தி

தமிழ்நாடு

லயன்ஸ் சங்க மண்டல மாநாடு

Added : ஜன 11, 2020
Share
Advertisement
 லயன்ஸ் சங்க மண்டல மாநாடு

திண்டிவனம்:திண்டிவனத்தில், பன்னாட்டு லயன்ஸ் சங்கம், மண்டலம்-2ன் ஸ்மைல் மண்டல மாநாடு நடந்தது.

மண்டலத் தலைவர் ஆனந்த் தலைமை தாங்கினார். செயலாண்மைக் குழுத் தலைவர் முத்துராஜ்குமார் வரவேற்றார். மாவட்ட ஆளுனர் கீதா கமலக்கண்ணன் மாநாட்டு துவக்கவுரையாற்றினார்.சிறப்பு விருந்தினர் பன்னாட்டு இயக்குனர் சங்கர், அமுதா மதியழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னாள் ஆளுனர்கள் செல்வகாந்தி, பொன்னுராம், மண்டல சிறப்பு ஒருங்கினைப்பாளர் கோபி கிருஷ்ணா முன்னிலை வகித்தனர்

உடனடி முன்னாள் ஆளுனர் சரவணன், முதலாம் துணை ஆளுனர் முருகப்பன், இரண்டாம் துணை ஆளுனர் சுரேஷ் நீலகண்டன், முன்னாள் ஆளுனர்கள் வாழ்த்தி பேசினர்.மாவட்ட அவை செயலர் விஜயபானு மண்டல நிர்வாக அறிக்கையை சமர்ப்பித்தார். அவை பொருளாளர் சின்னமணி மண்டல நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாநாட்டில், சேவை திட்டமாக குளூனி அபய இல்லத்திற்கு குளிரூட்டும் பெட்டி வழங்கப்பட்டது.செயலாண்மைக் குழு பொருளாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X