அரசு மருத்துவக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் திருவிழா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் திருவிழா

Added : ஜன 11, 2020
Share
விக்கிரவாண்டி:விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நிர்வாக அலுவலக வளாகத்தில் நடந்த விழாவிற்கு, கல்லுாரி டீன் டாக்டர் குந்தவி தேவி தலைமை தாங்கினார்.மருத்துவ கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், துணை மருத்துவ கண்காணிப்பாளர் புகழேந்தி, ஆர்.எம்.ஓ., சாந்தி, துணை

விக்கிரவாண்டி:விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நிர்வாக அலுவலக வளாகத்தில் நடந்த விழாவிற்கு, கல்லுாரி டீன் டாக்டர் குந்தவி தேவி தலைமை தாங்கினார்.மருத்துவ கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், துணை மருத்துவ கண்காணிப்பாளர் புகழேந்தி, ஆர்.எம்.ஓ., சாந்தி, துணை முதல்வர் அனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிர்வாக அலுவலர் கவிஞர் சிங்காரம் வரவேற்றார.தொடர்ந்து, அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கலிட்டு கல்லுாரியின் டீன் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார. டாக்டர்கள் ராஜேஸ்வரி, ஏ.ஆர்.எம்.ஓ., ஸ்ரீராம, நிஷாந்த், ராஜீவ் குமார் மற்றும் அனைத்து துறை டாக்டர்கள், பேராசிரியர்கள் , உதவி பேராசிரியர்கள் , செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிர்வாக அலுவலர் ஆனந்த ஜோதி நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X