சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிராக்டர் மோதி குழந்தை பலி

Added : ஜன 11, 2020
Advertisement

மூங்கில்துறைப்பட்டு:மூங்கில்துறைப்பட்டு அருகே டிராக்டர் மோதியதில், பலத்த அடிபட்டட சிறுமி, சிகிச்சை பலனில்லாமல் இறந்தார்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த மணலுாரை சேர்ந்த அப்துல் மஜித் மகள் சாஹிஸ்தா, 11; இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி நேற்று பள்ளிக்கு செல்ல பள்ளி பேருந்துக்காக காதர் மளிகை கடை அருகே நின்றிருந்த போது, எதிரே வந்த டிராக்டர் சிறுமி மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சிறுமியை மீட்டு தீவிர சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சாஹிஸ்தா சிகிச்சை பலனில்லாமல் இறந்தார்.இதுகுறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்குபதிந்து விபத்து ஏற்படுத்திய டிராக்டர் டிரைவரான நுாருல்லாஹ், 20; என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X