பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு 90 சதவீதம் தேர்ச்சி இலக்கு

Added : ஜன 11, 2020
Advertisement

மதுரை, "மதுரையில் ஆசிரியர்கள் தங்கள் பாடங்களில் மாணவர்களை 90 சதவீதம் தேர்ச்சி பெற வைக்க வேண்டும்" என முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் வலியுறுத்தினார்.மதுரை சேதுபதி பள்ளியில் அரையாண்டு தேர்வு எழுதிய 27,756 பத்தாம் வகுப்பு, 26,301 பிளஸ் 1 மற்றும் 24,817 பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி விகிதங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. சுவாமிநாதன் தலைமை வகித்தார். டி.இ.ஓ.,க்கள் முத்தையா, இந்திராணி, மீனாவதி, வளர்மதி, நேர்முக உதவியாளர்கள் சின்னத்துரை, ரகுபதி பங்கேற்றனர். 80 சதவீதத்திற்கும் கீழ் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். தேர்ச்சி குறைவிற்கான காரணம் குறித்து கேட்கப்பட்டது.சுவாமிநாதன் பேசியதாவது: ஒவ்வொரு பள்ளியும் குறைந்தது 5 'டாப்பர்' மாணவர், நீட் தேர்வில் ஒரு மாணவரை தேர்ச்சி பெற வைக்க வேண்டும். முதல் திருப்புதல் தேர்வில் 90 சதவீதம் தேர்ச்சி பெற வைக்க வேண்டும். காலை, மாலை சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும். இதற்கு பொறுப்பான ஆசிரியரின் பயோ மெட்ரிக் வருகை கண்காணிக்கப்படும் என்றார்.கூட்டத்தில் மாணவருக்கான 'சிறப்பு கையேட்டை' ஒருங்கிணைந்த கல்வித் திட்ட கூடுதல் இயக்குனர் குப்புசாமி வெளியிட்டார். பொதுத்தேர்வு வினாத்தாளில் உள்ள குறைகளை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X