பொது செய்தி

தமிழ்நாடு

தினமலர்-பட்டம் மெகா வினாடி வினா போட்டி பான்சி வித்யாலயா மெட்ரிக் மாணவர்கள் உற்சாகம்

Added : ஜன 11, 2020
Advertisement

மதுரை, தினமலர் மாணவர் பதிப்பு - 'பட்டம்' இதழ் சார்பில் நடந்த 'பதில் சொல்; அமெரிக்கா செல்' என்ற மெகா வினாடி வினா போட்டியில் மதுரை திருநகர் பான்சி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.மாணவர் எதிர்காலம் கருதி தினமலர் நாளிதழ் 'பட்டம்' எனும் மாணவர் பதிப்பை வெளியிடுகிறது. பொது அறிவை வளர்க்கும் வகையில் பள்ளி அளவிலும், மாவட்ட மற்றும் மண்டல அளவிலும் தினமலர் பட்டம் மற்றும் கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் சார்பில் இந்த வினாடி வினா போட்டிகள் நடத்தப்படுகின்றன.பள்ளிகள் தோறும் நடக்கும் இப்போட்டியின் தொடர்ச்சியாக பான்சி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடந்த முதல்நிலை தேர்வில் ஏராளமானோர் பங்கேற்றனர். இவர்களுக்கு பொது அறிவு உட்பட 25 வினாக்கள் கேட்கப்பட்டு 20 நிமிடங்கள் தேர்வு நடந்தது. அதிக மதிப்பெண் அடிப்படையில் 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.இவர்கள் எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு ஆசிரியைகள் மேனகாராணி, ராமலட்சுமி வினாடி வினா போட்டி நடத்தினர். சரியான விடை அளித்து அதிக மதிப்பெண் பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கே.பிரவீன்நாராயணன் - ஆர். ஆகாஷ் ஜோடி வெற்றி பெற்றது.இதையடுத்து நடந்த பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தினமலர் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை தாளாளர் சுப்பிரமணியன் வழங்கினார். முதல்வர் கபிலா வைஷ்ணவி முன்னிலை வகித்தார்.முதல் சுற்றில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தேர்வு பெற்ற மாணவிகளுக்கு தினமலர் கேடயம் வழங்கப்பட்டது. போட்டியை ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.நிகழ்ச்சிகளை போத்தீஸ், வீனஸ் எலக்ட்ரானிக்ஸ், லோட்டே காபி பைட், குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து வழங்கின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X