பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சியில் துணை மின் நிலையம்

Added : ஜன 11, 2020
Advertisement

தியாகதுருகம்,:கள்ளக்குறிச்சி பகுதி மக்களின் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் விரைவில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டுமென கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.,, சட்டசபையில் வலியுறுத்திப் பேசினார்.

இதுகுறித்து அவர் சட்டசபையில் நடந்த கேள்வி நேரத்தில் பேசியதாவது:கள்ளக்குறிச்சி நகரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கள்ளக்குறிச்சியில் மேலும் ஒரு துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். அதே போல் வாடகை கட்டடத்தில் இயங்கும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை அமைக்கவேண்டும்.
அதற்காக இடம் தேர்வு செய்வதில் காலதாமதம் ஆனது. தற்போது பெருவங்கூர் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட கிராமத்தில் 4 ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலம் தேர்வு செய்து மின்வாரிய துறை அமைச்சரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் புதிய துணை மின் நிலையத்தை விரைவில் அமைக்க வேண்டும். இவ்வாறு பிரபு எம்.எல்.ஏ., பேசினார்.இதற்கு மின் துறை அமைச்சர் தங்கமணி, ''கள்ளக்குறிச்சியில் துணை மின் நிலையம் அமைக்க இதற்குமுன் கண்டறியப்பட்ட இடத்திற்கு செல்ல அணுகுசாலை இல்லாத காரணத்தால் மாற்று இடம் ஏற்பாடு செய்யப் பட்டது.இப்போது 4 ஏக்கர் இடத்தை பிரபு எம்.எல்.ஏ., கண்டறிந்து கொடுத்திருக்கிறார். இந்த இடத்தில் துணை மின் நிலையம் அமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும'' என்று பதிலளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X