சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை கொள்ளை

Added : ஜன 11, 2020
Advertisement

திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருக்கோவில் அடுத்த அம்மன்கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயம்பெருமாள், 60; கடந்த 8ம் தேதி காலை 6:00 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வயலுக்கு வேலைக்கு சென்று விட்டனர்.வயலிலிருந்து, மாலை 6:00 மணிக்கு வீட்டிற்கு வந்து கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 20 சவரன் நகை, மூன்று வெள்ளி கொலுசு திருடப்பட்டிருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சமாகும்.

இதுகுறித்து ஐயம்பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப் பதிந்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X