சின்னசேலம் கமிட்டியில் விவசாயிகள் முற்றுகை

Added : ஜன 11, 2020
Advertisement

சின்னசேலம்:சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சின்னசேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தற்போது மக்காசோளம் வரத்து அதிகரித்து உள்ளது. இங்கு கடந்த 8 ம் தேதி கொள்முதல் செய்யப்பட்ட மக்காசோளத்திற்கு வியாபாரிகள் பணம் பட்டுவாடா செய்யவில்லை.இதனை தொடர்ந்து கண்காணிப்பாளர் கிருஷ்ணன் விவசாயிகளுக்கு பணம் வழங்காமல் கொள்முதல் செய்யப்பட்ட மக்காசோளத்தை வியாபாரிகள் எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் கடந்த 2 தினங்களாக கமிட்டியில் நடந்த ஏலத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வந்தனர். இதனால் கடந்த 2 தினங்களாக விவசாயிகள் கமிட்டிக்கு கொண்டு வந்த 1530 மக்காசோளம் மூட்டைகள் தேக்கமடைந்தது.இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று மாலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் வளர்மதி மற்றும் சின்னசேலம் போலீசார் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஏலத்தை நடத்தி வைத்தனர். ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X