திருக்கோவிலுாரில் துப்புரவு பணியாளர்கள் திடீர் போராட்டம்

Added : ஜன 11, 2020
Advertisement

திருக்கோவிலூர்:பேரூராட்சி துப்புரவு ஊழியரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி துப்புரவு பணியாளர்கள் பிரச்னை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருக்கோவிலூர் துப்புரவு ஊழியர் மும்மூர்த்தி, ஏழுமலை ஆகிய இருவரும் நேற்று முன்தினம் மாலை சைலோம் பகுதியில் துப்புரவு பணி மேற்கொண்டிருந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் துப்புரவு ஊழியர்கள் இருவரையும் பணியை ஒழுங்காக செய்யவில்லை எனக்கூறி தாக்கியதாக தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த துப்புரவு ஊழியர்கள் நேற்று காலை தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வேலை நிறுத்தம் செய்யப் போவதாக பேரூராட்சி அலுவலகம் முன்பாக திடீரென திரண்டனர்.

துப்புரவு ஆய்வாளர் முத்து, மேற்பார்வையாளர் சீனிவாசன், கார்த்திக் ஆகியோர் செயல் அலுவலர் வந்தவுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.இதன்பேரில் துப்புரவு பணியாளர்கள் வேலைக்கு சென்றனர்.ஊழியர்கள் தாக்குதல் குறித்து, செயல் அலுவலர் செல்லப்பிள்ளை திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X