பொது செய்தி

தமிழ்நாடு

திறந்த வெளியில் இயற்கை உபாதை

Added : ஜன 11, 2020
Advertisement

திண்டிவனம்:திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட திறந்த வெளியில் இயற்கை உபாதையை கழித்தால், அபராதம் விதிக்கப்படும்.

இதுகுறித்து, நகராட்சி ஆணையாளர் ஸ்ரீபிரகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்புதிண்டிவனம் நகராட்சி பகுதிகளில் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கழிப்பறை இல்லாத வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு, 3159 தனி நபர் கழிப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

கழிப்பறை கட்ட இட வசதி இல்லாத குடிசை பகுதிகளில் 20 இடங்களில் சமுதாய கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.எனவே நகராட்சி பகுதியில் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பது, தடை செய்யப்பட்டுள்ளது.இதனை மீறுபவர்களுக்கு நகராட்சி சார்பில் தலா ரூ.100 அபராதம் விதிக்கப்படும், என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X