சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் ஆபீசில் கணவருடன் மாற்றுத்திறனாளி பெண் திடீர் தர்ணா

Added : ஜன 11, 2020
Advertisement
 கலெக்டர் ஆபீசில் கணவருடன் மாற்றுத்திறனாளி பெண் திடீர் தர்ணா

விழுப்புரம்:அரசு வேலை வழங்கக்கோரி, மாற்றுத்திறனாளி பெண், தனது கணவருடன் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

விழுப்புரம் அடுத்த ப.வில்லியனுாரை சேர்ந்தவர் சரவணன் மனைவி தங்கராணி, 37; மாற்றுத்திறனாளியான இவர், நேற்று தனது கணவருடன் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சரவணன், தங்கராணியை விசாரித்தனர்.

விசாரணையில் தங்கராணி கூறுகையில், கடந்த 2013ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் எனக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள நான், எங்கள் பகுதி அரசு பள்ளியில் சமையலர் பணி தேர்வில் கலந்து கொண்டேன்.இதில், முன்னுரிமை அடிப்படையில் வேலைக்கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை.

கடந்த மாதம் 24ம் தேதி கண்டமங்கலம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த அலுவலக உதவியாளர் பணிக்கு நேர்முக தேர்விலும் பங்கேற்றேன்.ஆனால், இந்த பணிக்கு ஆளும்கட்சியினர் வேறு நபர்களை நியமிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, மாற்றுத்திறனாளியான எனக்கு இந்த வேலை கிடைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இச்சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X