இந்தியா

திடக் கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நடவடிக்கைகள்...தீவிரம்!கல்வித் துறையுடன் உள்ளாட்சித் துறை கைகோர்ப்பு

Added : ஜன 11, 2020
Advertisement
  திடக் கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நடவடிக்கைகள்...தீவிரம்!கல்வித் துறையுடன் உள்ளாட்சித் துறை கைகோர்ப்பு

புதுச்சேரி:திடக் கழிவு மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் தடை தொடர்பாக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு,பள்ளிக் கல்வித் துறையை, உள்ளாட்சித் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

திடக்கழிவு மற்றும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை தொடர்பான மாநில அளவிலான ஆலோ சனை வாரியத்தின் கூட்டம், கடந்த டிசம்பர் 3ம் தேதி நடந்தது. இதில், திடக்கழிவு, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை தொடர்பாக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.இதனடிப்படையில், பள்ளிக் கல்வி இயக்குனருக்கு, உள்ளாட்சித் துறை இயக்குனர் மலர்கண்ணன் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், மூன்று திட்டங்களை செயல்படுத்துமாறு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவது உள்ளிட்ட திடக் கழிவு மேலாண்மை தொடர்பாகவும், தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது தொடர்பாகவும் மாணவர்களும், ஆசிரியர்களுக்கும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியை மாதத்தில் ஒரு நாள் நடத்தலாம்.

உணவு கழிவுகள் மற்றும் மக்கும் கழிவுகளை, பள்ளி வளாகத்தில் சிறிய பள்ளங்கள் அமைத்து சேகரித்து உரம் தயாரிக்கும் பணியில் ஈடுபடலாம். ஒவ்வொரு வாரமும் புதன் கிழமையன்று, பிளாஸ்டிக் சேகரிப்பு தினமாக அனுசரிக்குமாறு, பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அன்றைய தினத்தன்று, மாணவர்களும், ஆசிரியர்களும் தங்களது வீடுகளில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்து வந்து, பள்ளியில் சேகரித்து வைக்க வேண்டும்.

அவற்றை, சம்பந்தப்பட்ட நகராட்சி அல்லது கொம்யூன் பஞ்சாயத்துக்கள் மூலமாக அகற்றலாம் அல்லது சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை வியாபாரிகளிடம் விற்று, அதன் மூலம் கிடைக்கும் தொகையை பள்ளியின் பராமரிப்பு பணிகளுக்கு பயன்படுத்தலாம் ஆகிய ஆலோசனைகளை பள்ளிக் கல்வித் துறைக்கு, உள்ளாட்சித் துறை தெரிவித்துள்ளது


உள்ளாட்சித் துறை வியூகம்



புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ள பள்ளிகளில் 2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். அதாவது, ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளையாவது பள்ளியில் படிக்கின்றனர்.எனவே, மாணவ மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமாக, பெற்றோர்கள் மத்தியில் எளிதாக விழிப்புணர்வு கருத்தை கொண்டு செல்ல முடியும் என, உள்ளாட்சித் துறை வியூகம் வகுத்துள்ளது. உள்ளாட்சித் துறையுடன் பள்ளிக் கல்வித் துறை கைகோர்த்தால் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X