இந்தியா

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : ஜன 11, 2020
Advertisement
 போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நெட்டப்பாக்கம்:கரையாம்புத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி கருணாலயம் கிராம நலச்சங்கம், சமூக நலவாரியம், டில்லி தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கருணாலயம் கிராம நலச்சங்க இயக்குனர் அங்காளன் தலைமை தாங்கினார். சங்க குடும்ப ஆலோசகர் அபிராமி வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் முல்லைவாணன் முன்னிலை வகித்தார்.சமூக நல வாரிய தலைவி வைஜெயந்தி, போதைப் பொருளால் ஏற்படும் விளைவுகள், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கினார்.

தொடர்ந்து மாணவர்கள் இளம் வயதிலிலேயே போதைப் பொருள்களின் ஆபத்தினை உண்ர்ந்து, உங்கள் குடும்பத்தினர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.இணை இயக்குனர் பஷ்பவள்ளி, ஆசிரியர் ஜெயபிரகாஷ், ஜானகிராமன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நலச்சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.குடும்ப நல ஆலோசகர் சுகன்யா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X