இந்தியா

அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு திடீர் நகரில் கணக்கெடுக்கும் பணி

Added : ஜன 11, 2020
Advertisement
 அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு திடீர் நகரில் கணக்கெடுக்கும் பணி

புதுச்சேரி:திடீர் நகரில் குடிசைகளில் வசிக்கும் மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான முதல்கட்ட கணக்கெடுக்கும் பணி துவங்கியது.

உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட திடீர் நகரில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடிசைகளில் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தர வேண்டும் என, சட்டசபையில் சிவா எம்.எல்.ஏ., தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார்.

தற்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், குடிசை மாற்று வாரியம் மூலமாக திடீர் நகர் பகுதியில் 200 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, அங்கு குடியிருக்கும் பயனாளிகளின் பட்டியலை சரி பார்க்கும் பணி துவங்கியது.

சிவா எம்.எல்.ஏ., முன்னிலையில், குடிசை மாற்று வாரிய தலைமை செயல் அலுவலர் ஸ்ரீதரன், உதவிப் பொறியாளர் அனில்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் திடீர் நகரில் வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X