குடியுரிமை சட்டத் திருத்தம் :விழிப்புணர்வு பிரசாரம்| Dinamalar

இந்தியா

குடியுரிமை சட்டத் திருத்தம் :விழிப்புணர்வு பிரசாரம்

Added : ஜன 11, 2020
 குடியுரிமை சட்டத் திருத்தம் :விழிப்புணர்வு பிரசாரம்

புதுச்சேரி:முதலியார்பேட்டை தொகுதியில் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மத்திய அமைச்சர் வழங்கினார்.குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரத்தை பா.ஜ.,வினர் மேற்கொண்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, முதலியார்பேட்டை தொகுதியில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி, குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவான துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கினார். நகர மாவட்ட தலைவர் வக்கீல் அசோக்பாபு தலைமை தாங்கினார்.

முதலியார்பேட்டை தொகுதி தலைவர் பிரகாஷ் முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளர் களாக மாநில தலைவர் சாமிநாதன், குடியுரிமை சட்ட ஆதரவு பிரசாரத்திற்கான பொறுப்பாளர் அருள்முருகன், துணைத் தலைவர்கள் ஏம்பலம் செல்வம், செல்வம், பொதுச் செயலர்கள் விக்ரமன், ரவிச்சந்திரன், நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முன்னதாக, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வீடுகளில் கோலமிட்டு மக்கள் வரவேற்பு அளித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X