இந்தியா

பேராசிரியர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு

Added : ஜன 11, 2020
Advertisement

புதுச்சேரி:ரெட்டியார்பாளையத்தில் பொறியியல் கல்லுாரி பேராசிரியர் வீட்டில், ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 15 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ரெட்டியார்பாளையம், சுதாகர் நகர், 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பழனிராஜா. புதுச்சேரி பொறியியல் கல்லுாரி பேராசிரியர். இவரது மனைவி மேரி ெஷரித்தா. தனியார் பள்ளியில் ஆசிரியர். இவர்கள், உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக கடந்த நவம்பர் 28ம் தேதி வங்கி லாக்கரில் இருந்து நகைகளை எடுத்து வந்து வீட்டின் கீழ்தளத்தில் இருந்த அறை பீரோவில் வைத்துள்ளார்.

மழை காரணமாக, உறவினர் திருமணத்திற்கு செல்லவில்லை. மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக நகைகளை மீண்டும் வங்கியில் வைக்காமல், வீட்டின் அலமாரியில் வைத்துள்ளனர்.கடந்த 5ம் தேதி அலமாரியின் சாவி வாஷ்பேஷன் அருகில் கிடந்தது. சந்தேகமடைந்த மேரி ஷெரித்தா அலமாரியை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 15 சவரன் நகை திருடு போயிருந்தது.

அன்று, வீட்டில் வேலை செய்யும் பெண் அறைக்கு வந்து சென்றதால், சந்தேகமடைந்து அவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டார். ஆனால், அவர் போனை எடுக்கவில்லை.புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X