இந்தியா

பூச்செடி வளர்ப்பதில் தகராறு 8 பேர் மீது வழக்கு

Added : ஜன 11, 2020
Advertisement

புதுச்சேரி:பூச்செடி வளர்ப்பதில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக எட்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

உருளையன்பேட் டை, ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் கார்த்தி. இவருக்கு சொந்தமான இரண்டு மாடி வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் முதல் தளத்தில் உழவர்கரை நகராட்சியில் பில் கலெக்டராக பணியாற்றும் சரவணனும், இரண்டாவது மாடியில் ரியல் எஸ்டேட் பிரமுகர் முருகன் வசித்து வருகின்றனர்.

சரவணன் மனைவி மாலாவிற்கும், முருகன் மனைவி கலைவாணிக்கும் பூச்செடி வளர்ப்பதில் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மாலா, அவரது கணவர் சரவணன் மற்றும் சிலர் கலைவாணியை தாக்கினர். அதனைத் தொடர்ந்து கலைவாணி மற்றும் அவரது தாய் பொற்கிளை ஆகிய இருவரும் சரவணனை தாக்கினர்.

இதுகுறித்து கலைவாணி அளித்த புகாரின் பேரில் மாலா உள்ளிட்ட 6 பேர் மீதும், சரவணன் அளித்த புகாரின் பேரில் கலைவாணி மற்றும் அவரது தாய் பொற்கிளை ஆகியோர் மீது உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X