பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் :ஸ்ரீஜெயேந்திரா சரஸ்வதி முதலிடம்| Dinamalar

பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் :ஸ்ரீஜெயேந்திரா சரஸ்வதி முதலிடம்

Added : ஜன 11, 2020

கோவை:மாவட்ட அளவில், பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில், ஸ்ரீஜெயேந்திரா சரஸ்வதி பள்ளி அணி, ஏழு ரன் வித்தியாசத்தில் த்ரில்வெற்றி பெற்றது.கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019-20ம் ஆண்டு, 'கோயம்புத்துார் யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186 டிராபி' வயது வரம்பற்றோர்களுக்கான கிரிக்கெட் போட்டி, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானங்களில் நடந்தது. 12 பள்ளி அணிகள் பங்கேற்றன.இறுதிப்போட்டியில், ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி அணி, ஸ்ரீஜெயேந்திரா சரஸ்வதி பள்ளி அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஸ்ரீஜெயேந்திரா சரஸ்வதி பள்ளி அணி, 40.3 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 158 ரன் எடுத்தது.அடுத்து களமிறங்கிய ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி அணி, எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 37 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 152 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், ஸ்ரீஜெயேந்திரா சரஸ்வதி பள்ளி அணி, ஏழு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X