சாம்பியன் ஆனது சி.எம்.எஸ்., அணி! டேக்குவாண்டோ போட்டியில் மாணவர்கள் அசத்தல்

Added : ஜன 11, 2020
Advertisement

கோவை:பாரதியார் கல்லுாரிகளுக்கு உட்பட்ட கல்லுாரி மாணவர்களுக்கான டேக்குவாண்டோ போட்டியில், சி.எம்.எஸ்., கல்லுாரி அணி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.15 கல்லுாரியிலிருந்து, 50க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். 54, 58, 63, 68, 74, 80, 87 உள்ளிட்ட பல்வேறு எடை பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.ஒவ்வொரு பிரிவிலும் முதல், இரண்டு இடங்களை பிடித்தவர்கள் விபரம்:54 கிலோ எடை பிரிவில், கே.ஜி., கல்லுாரியின் மணி பாரதி, பி.எஸ்.ஜி., கல்லுாரியின் சந்திரபாபு; 58 கிலோ எடை பிரிவில், சி.எம்.எஸ்., கல்லுாரியின் அப்துல் வாஹித், பி.எஸ்.ஜி., கல்லுாரியின் சதிஷ் குமார்; 63 கிலோ எடை பிரிவில், சி.எம்.எஸ்., கல்லுாரியின் இளங்கோவன், பி.எஸ்.ஜி., கல்லுாரியின் பிரமோத் வெற்றி பெற்றனர்.68 கிலோ எடை பிரிவில், இந்துஸ்தான் கல்லுாரியின் சுபம் டி போசல், ரத்தினம் கல்லுாரியின் ஜாவாகன்; 74 கிலோ எடை பிரிவில், கம்பன் கல்லுாரியின் சபரீஸ்வரன், சி.எம்.எஸ்., கல்லுாரியின் ஆனந்த ராஜா; 80 கிலோ எடை பிரிவில், சி.எம்.எஸ்., கல்லுாரியின் செல்வனேசன், கொங்கு கலை அறிவியல் கல்லுாரியின் பாரதிகுமார் ஆகியோர் முதல், இரண்டு இடங்களை பிடித்தனர்.போட்டியின் முடிவில், அதிக புள்ளிகள் பெற்ற சி.எம்.எஸ்., கல்லுாரி அணி முதலிடத்தையும்; பி.எஸ்.ஜி., கல்லுாரி அணி இரண்டாமிடத்தையும் பிடித்தன.வெற்றி பெற்ற வீரர்களுக்கு, டிப்ஸ் கல்லுாரியின் முதல்வர் ஹேமநளினி கோப்பைகள் வழங்கி பாராட்டினார். போட்டி ஒருங்கிணைப்பாளராக கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர், கணேசன் செயல்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X