இந்தியா

முதல்வர் பதவி விலக வேண்டும் வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்

Added : ஜன 11, 2020
Advertisement
 முதல்வர் பதவி விலக வேண்டும் வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்

புதுச்சேரி:ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,வே ஆட்சியை குறை கூறும் அளவில் புதுச்சேரியில் காங்., ஆட்சி நடக்கிறது என, வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ., கூறியுள்ளார்.

காங்., அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய பாகூர் தொகுதி காங்., எம்.எல்.ஏ., தனவேலுவை அ.தி.மு.க.,வை சேர்ந்த வையாபுரிமணிகண்டன் எம்.எல்.ஏ., சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரியில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக மக்கள் நலனுக்கு எதிரான ஆட்சியை, காங்., -தி.மு.க., கூட்டணி அரசு நடத்தி வருகிறது.

ஆட்சியாளர்களின் மீது மக்களிடம் உள்ள அதிருப்தியை தொடர்ந்து அ.தி.மு.க., சுட்டிக்காட்டி வருகிறது. ஆனால், பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி, மக்களிடம் ஆதரவு இருப்பதாக முதல்வர் நாராயணசாமி தம்பட்டம் அடித்து வந்தார்.இந்நிலையில், ஆளும் காங்.,கட்சியை சேர்ந்த தனவேலு எம்.எல்.ஏ., குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்த நாராயணசாமிக்கு ஆளுமைத்திறன் இல்லை.

ஆம்புலன்சிற்கு கூட டீசல் வழங்க முடியாத அவல நிலை புதுச்சேரியில் நிலவுகிறது. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.எதிர்கட்சிகள் மீதும், கவர்னர் மீதும், மத்திய அரசின் மீதும் பழிபோட்டு வந்த முதல்வர் நாராயணசாமி, அவரது கட்சி எம்.எல்.ஏ.,வின் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்.ஆளும்கட்சி எம்.எல்.ஏ., மக்களின் நலன் கருதி வீதியில் இறங்கி போராட தொடங்கியுள்ளனர்.

எனவே, காங்., தி.மு.க., கூட்டணி அரசுக்கு ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்க தகுதி இல்லை. எனவே, தன் கட்சி எம்.எல்.ஏ., வின் கருத்தை ஏற்று, முதல்வர் பதவியை நாராயணசாமி ராஜினாமா செய்ய வேண்டும்.புதுச்சேரியில் கேசினோ, லாட்டரி, காபரே கொண்டுவந்தால் தமிழகம், புதுச்சேரி இளைஞர்களும், மாணவர்களும் சீரழிவை சந்திப்பர். புதுச்சேரியில் இவைகளை கொண்டு வர அ.தி.மு.க., ஒருபோதும் அனுமதிக்காது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X