இந்தியா

குளுனி பள்ளியில் பொங்கல் விழா

Added : ஜன 11, 2020
Advertisement

புதுச்சேரி:லாஸ்பேட்டை குளுனி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

பள்ளி வளாகத்தில் நடந்த பொங்கல் விழாவை, குளுனி இல்ல தலைவி லோரா, குளுனி பள்ளி முதல்வர் ரோஸிலி தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

விழாவில் செயின்ட் ஆன்ஸ் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.'விவசாயத்தை மேம்படுத்துவோம்', 'விவசாயிகளை காப்போம்', 'நவீன உலகத்தின் வளர்ச்சிக்கேற்ப விவசாயத்தை வளர்ப்போம்' என்ற மைய கருத்தை அடிப்படையாக வைத்து பொம்மலாட்டம் வாயிலாக மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

விழாவின் நிறைவில் இனிப்புகள் வழங்கப்பட்டது. 'உழவர்களை காப்போம்', 'உழவுத்தொழிலை மேம்படுத்துவோம்' என்ற உறுதிமொழியுடன் விழா நிறைவு பெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X