பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனைக்கு புதிய கருவிகள்! மருத்துவ கல்வி துணை இயக்குனர் ஆலோசனை

Added : ஜன 11, 2020
Advertisement

கோவை:''ஜைகா திட்டப்பணிகள் வரும் ஜூன் மாதம் துவங்கும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,'' என, மருத்துவக் கல்வி துணை இயக்குனர் சபிதா தெரிவித்தார்.தமிழக அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை(ஜைகா), நிதியுதவி வழங்கியுள்ளது.
இதையடுத்து, கோவை, திருப்பூர், மதுரை மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளின் உயர் சிறப்பு மருத்துவ பிரிவுகள் துவங்கப்பட உள்ளன. அதன் அடிப்படையில், கோவை அரசு மருத்துவமனைக்கும், 286 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில், புதிதாக அமைய உள்ள வார்டுகளுக்கு, தேவையான கருவிகள் குறித்து கேட்டறிவதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. மருத்துவக் கல்வி துணை இயக்குனர் சபிதா, ஜைகா திட்டக்குழுவினர் பங்கேற்றனர்.
மருத்துவக் கல்வி துணை இயக்குனர் சபிதா கூறுகையில், ''மாநில அளவில் பல்வேறு மருத்துவக் கல்லுாரிகளில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மருத்துவக் கருவிகள் அமைய வேண்டிய இடங்கள், அவற்றை பயன்படுத்தும் முறை குறித்து, துறை தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், வரும் ஜூனில் கட்டுமானப்பணிகள் துவங்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X