பொது செய்தி

தமிழ்நாடு

'கூடாரை வெல்லும்

Added : ஜன 11, 2020
Advertisement
 'கூடாரை வெல்லும்

ராஜவீதியை ஒட்டியுள்ள உப்பார வீதியில், அமைந்துள்ள கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில், நாளை அதிகாலையில் திருப்பாவையின், 27ம் பாடலை பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.கோவிலின் சிறப்புகோவை, உப்பார வீதியில்உள்ள இப்பெருமாள் கோவில், நுாற்றாண்டுகளை கடந்தது. இங்குள்ள கல்யாண வெங்கட்ரமணசுவாமியை வழிபாடு செய்தால், விரைவாக விவாகம் நடைபெறும்; உற்சவர் சந்தான வேணுகோபால சுவாமியை அர்ச்சகரிடம் கேட்டுப்பெற்று, சில நிமிடங்கள் கையில் வைத்து பிரார்த்தனை செய்து கொடுத்தால், சந்தான பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை வரம் வேண்டி, இக்கோவிலில் பிரார்த்தனை செய்வோர் ஏராளம்.மார்கழி மாதத்தையொட்டி, இக்கோவிலில் நாளை அதிகாலையில், 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா...' என்று துவங்கும் திருப்பாவை பாடலை, பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.பாடலின் பொருள்உன் அடிபணியாதவரை வெல்லுகின்ற குணமுடைய கோவிந்தா... நாம் கூடியிருந்து மனம் குளிர்ந்து நோன்பை கொண்டாடுவோம். நோன்பு முடியும் தருவாயில், நாங்கள் சூடி மகிழ தலை அணியாக, சூடகம், தோள் அணியாக தோள்வளை, காது அணியாக கர்ணப்பூ, பாத அணியாக பாடகம் ஆகிய அணிகலன்களை நீ கொடுக்க, நாங்கள் அணிந்து கொள்வோம்.அதன் பின் பாற்சோறு மூடுமாறு நெய் ஊற்றி, ஊறிய நெய் முழங்கை வரை வந்து செல்லுமாறு, நாம் உண்டு மகிழ்வோம். அவ்வாறு நீயும் நப்பின்னை பிராட்டியும், நாங்களும் மகிழ்ந்த பின் உன்னைப்பாடி நோன்பை முடித்துக்கொள்வதே, நாங்கள் விரும்பும் சன்மானம் என்கின்றனர் ஆயர்பாடி சிறுமிகள் என்பதே இப்பாடலின் பொருள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X