இந்தியா

பட்டய கணக்காளர் கருத்தரங்கம்

Added : ஜன 11, 2020
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரியில், பட்டயக்கணக்காளர் மாணவர் அமைப்பின் இரண்டு நாள் கருத்தரங்கம் துவங்கியது.

அகில இந்திய பட்டய கணக்காளர்கள் கல்விக்குழு சார்பில், பட்டயக்கணக்காளர் இரண்டு நாள் கருத்தரங்கம், சுய்ப்ரேன் வீதியில் உள்ள கூடத்தில் நேற்று துவங்கியது. புதுச்சேரி மற்றும் காஞ்சிபுரம் பட்டயக்கணக்காளர் மாணவர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில், புதுச்சேரி பட்டய கணக்காளர் மாணவர்கள் அமைப்பு தலைவர் ஆடிட்டர் மஞ்சுபாசினி வரவேற்றார்.

இந்திய பட்டயக்கணக்காளர் அமைப்பின் பிராந்திய மாணவர் அமைப்பின் தலைவர் ரேவதி ரகுநாதன் தொடக்க உரையாற்றினார். மத்திய குழுவின் உறுப்பினர் ராஜேந்திரகுமார் சிறப்புரையாற்றினார். மத்திய குழுவின் உறுப்பினர் ஆடிட்டர் சேகர் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

கருத்தரங்கில் மாணவர்கள் சரக்கு மற்றும் சேவை வரி தகவல் தொழில் நுட்பம், இந்திய கம்பெனிகள் சட்டம், வருமான வரி சட்டம், அக்கவுண்டிங் மற்றும் ஆடிட்டிங் பற்றி கருத்துக்கள் பதிவுசெய்யப்பட்டன.

கருத்தரங்கில் புதுச்சேரி பட்டயக்கணக்காளர் அமைப்பு தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள், காஞ்சிபுரம் பட்டய கணக்காளர் அமைப்பு தலைவர் ஜெயசங்கர் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் புதுச்சேரி, விழுப்புரம், கடலுார், தாம்பரம், மதுரை, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், சட்டீஸ்கர், சேலம், ராஜஸ்தான் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பட்டய கணக்காளர் மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X