இந்தியா

பொறியாளரிடம் வழிப்பறி இரு வாலிபர்களுக்கு வலை

Added : ஜன 11, 2020
Advertisement

புதுச்சேரி:நள்ளிரவில் லிப்ட் கேட்பது போல் நடித்து, பொறியாளரை வழிமறித்து தாக்கி மொபைல் மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்ற இரு வாலிபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

ரெட்டியார்பாளையம், ஆனந்தம் நகரை சேர்ந்தவர் யுவராஜ் மகன் மகேஸ்வரன்,22; பி.டெக்., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த இவர் மூலக்குளத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.இவர், கடந்த 8ம் தேதி இரவு 12.00 மணிக்கு வேலை முடிந்து வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது, சாலையோரம் நின்றிருந்த இரண்டு வாலிபர்கள் தங்கள் பைக் பழுதாகி நின்றுவிட்டதாக கூறி 'லிப்ட்' கேட்டனர்.

பரிதாபப்பட்ட மகேஸ்வரன், இருவரையும் தனது பைக்கில் ஏற்றிக் கொண்டார். அவர்கள் பைக்கை டோப் செய்து வந்தனர். வில்லியனுார் ஒதியம்பட்டு சாலையில் வெங்கடேஸ்வரா நகர் அருகே, பைக்கில் இருந்து இறங்கிய, வாலிபர்கள் இருவரும் அங்கு கிடந்த பாட்டிலை உடைத்து மகேஸ்வரன் முகத்தில் குத்திவிட்டு, அவர் வைத்திருந்த மொபைல்போன் மற்றம் 900 ரூபாய் பணத்தை கொள்ளை அடித்துக் கொண்டு அவர்களது பைக்கில் தப்பி சென்றனர்.

படுகாயமடைந்த மகேஸ்வரன், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின்பேரில் வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான இரு வாலிபர்களை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X