பொது செய்தி

தமிழ்நாடு

போலியோ சொட்டு மருந்து

Added : ஜன 11, 2020
Advertisement

வரும், 19ம் தேதி, கோவை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.இளம் பிள்ளை வாத நோயை தடுக்க, ஒவ்வொரு ஆண்டும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.கோவை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை, மருந்தகங்கள், சத்துணவு கூடங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில், வரும், 19ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை, 7:00 முதல், மாலை, 5:00 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும்.மாநகராட்சி பிரதான அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டுகளிலும் சிறப்பு முகாம் அமைக்கப்படுகிறது. வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களின் குழந்தைகள் விடுபடாமல் இருக்க, ஐந்து நடமாடும் ஊர்திகள் மூலம் சென்று, சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு மறக்காமல் சொட்டு மருந்து வழங்க வேண்டும் என, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X