பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க முகாம்

Added : ஜன 11, 2020
Advertisement

கோவை:கோவை மாவட்டத்தில் உள்ள, 974 ஓட்டுச்சாவடிகளிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம், இன்றும் நாளையும்நடக்கிறது.கடந்த, ஜன.,1ம் தேதியன்று, 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களில், தங்களது பெயரை பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.இரண்டாம் கட்டமாக, இன்றும், நாளையும் காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும்.www.nvsp.inஎன்ற இணைய முகவரி,Voters' Helpline Appஎன்ற செயலி மூலமாகவும்,www.elections.tn.gov.in என்ற இணைய முகவரி மூலமாகவும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.தவிர, பொது சேவை மையங்களிலும், உதவி பெறலாம். பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான மனுக்கள்வரும், 22ம் தேதி வரை பெறப்படும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X