இந்தியா

மகனை வளர்ப்பதே பெற்றோர்களுக்கு பெரும் சவால்! சிறப்பு பட்டிமன்றத்தில் வல்லவன் பளீச் தீர்ப்பு

Added : ஜன 11, 2020
Advertisement
 மகனை வளர்ப்பதே பெற்றோர்களுக்கு பெரும் சவால்! சிறப்பு பட்டிமன்றத்தில் வல்லவன் பளீச் தீர்ப்பு

புதுச்சேரி:பெற்றோர்களுக்குப் பெரும் சவாலாக இருப்பது மகனை வளர்ப்பதே' என, சிறப்புப் பட்டிமன்றத்தின் நடுவர் - தொழிலாளர் ஆணையர் வல்லவன் தீர்ப்பு வழங்கினார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியின் தமிழ்த் துறை - முத்தமிழ் மன்றம் சார்பில், சிறப்புப் பட்டிமன்றம் நேற்று நடந்தது. கல்லுாரிக் கலையரங்கத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் சுப்ரமணி தலைமை தாங்கினார். 'பெற்றோர்களுக்குப் பெரும் சவாலாக இருப்பது மகனை வளர்ப்பதா? மகளை வளர்ப்பதா?' என்ற தலைப்பில் நடந்த சிறப்புப் பட்டிமன்றத்துக்கு, தொழிலாளர் ஆணையர் வல்லவன் நடுவராக இருந்தார்.'

மகனை வளர்ப்பதே பெரும் சவால்' என்ற தலைப்பில் பேராசிரியர்கள் பட்டம்மாள், வாசுகி, செல்வப்பெருமாள் ஆகியோர் பேசினர். 'மகளை வளர்ப்பதே பெரும் சவால்' என்ற தலைப்பில் பேராசிரியர்கள் இளங்கோ, பாலமுருகன், ரேவதி ஆகியோர் வாதிட்டனர்.இருதரப்பு வாதங்களையும் தொடர்ந்து பேசிய நடுவர் வல்லவன், 'மகனை வளர்ப்பது, மகளை வளர்ப்பது ஆகிய இரண்டுமே பெற்றோர்களுக்கு சவாலான பணியாகவே இருக்கிறது.

இருந்தபோதும், மகனை வளர்ப்பதே பெற்றோர்களுக்குப் பெரும் சவாலாக உள்ளது' என தீர்ப்பளித்தார்.மேலும், அவர் பேசும்போது, 'பெண் குழந்தைகளை பொருத்தவரை, அவர்கள் வளரும்போதே ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வாழ்க்கையுடன் தொடர்புடைய ஒவ்வொரு விஷயங்களையும் இயற்கையாகவே கற்றுக் கொள்கின்றனர்.

கல்விக் கற்கும் காலத்தில் பொறுப்புடன் படித்து தேர்ச்சி பெறுகின்றனர்.அதேசமயம், ஆண் குழந்தைகளை பொருத்தவரை, அவர்கள் வளரும்போது ஒவ்வொரு கட்டத்திலும் பெற்றோர் அறிவுரைகளை கூறி வளர்க்க வேண்டி உள்ளது. குறிப்பாக, அப்பாவோ அல்லது அம்மாவோ மட்டுமே உள்ள குடும்பத்தில் பெரும் சவாலாகவே உள்ளது' என்றார்.தமிழ்த் துறை தலைவர் சேதுபதி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X