இந்தியா

உள்ளாட்சித்தேர்தல் நடத்த கவர்னர், முதல்வருக்கு அக்கறையில்லை: மா.கம்யூ., குற்றச்சாட்டு 

Added : ஜன 11, 2020
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த கவர்னர், முதல்வருக்கு அக்கறையில்லை என, மா.கம்யூ., குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து மா.கம்யூ., மாநில குழு உறுப்பினர் பெருமாள், பிரதேச செயலர் ராஜாங்கம் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது;புதுச்சேரி ஆட்சியாளர்கள் இலவச அரிசி வழங்குவதாகத்தான் வாக்குறுதி அளித்தனர். அதன்படி அரிசி தர முயற்சிப்பதற்கு கவர்னர் கிரண்பேடி தடையாக உள்ளார். 90 சதவீதம் பேர் பணம் வேண்டாம், இலவச அரிசிதான் வேண்டும் என்கின்றனர்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, மா.கம்யூ., தொடர்ந்த வழக்கில் 17.1.2018ம் அன்று, 8 வார காலங்களுக்குள் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து மாநில அரசு நடத்திய ஆலோசனை கூட்டத்தில், மாநில தேர்தல் ஆணையரை நியமித்து, உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கம்யூ., வலியுறுத்தியது.

இதன் மீது முதல்வரோ, கவர்னரோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கவர்னர் கிரண்பேடி ஆணையரை நியமிப்பதற்கான விளம்பரத்தை வெளியிட செய்தார். முதல்வர் அதை ரத்து செய்து, சட்டசபையில் புதிய ஆணையரையும் நியமித்தார்.

இதை மத்திய உள்துறை அமைச்சகத்தின் நடவடிக்கை மூலம் கவர்னர் கிரண்பேடி ரத்து செய்து, புதிய ஆணையரை தேர்வு செய்வதற்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளார்.கவர்னருக்கும் முதல்வருக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் அக்கறையில்லை. மாநில தேர்தல் ஆணையரை நியமிப்பதில் மட்டுமே அக்கறை காட்டி வருகின்றனர். இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து மக்களிடம் மா.கம்யூ., விழிப்புணர்வு ஏற்படுத்தும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X